கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக்
ADDED : 1024 days ago
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படமான 'தக் லைப்' படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் கமல் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
அடுத்தாண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இப்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கவுதம் கார்த்திக் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'கடல்' படத்தின் மூலம் தான் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.