உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு

அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. விடிய விடிய ஒருநாள் முழுக்க கொட்டிய கனமழையால் சாலைகள் எங்குபார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பில் மக்களை காப்பாற்ற அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ‛‛அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மையம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !