உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி

ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி

அறிமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள படம் 'ஹாய் நான்னா'. வைரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். அப்பா - மகள் உறவை மையமாக வைத்து அதில் ஒரு அழகிய காதலையும் சேர்த்து இந்த படத்தின் கதை உருவாகி உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பாடல்கள், டிரைலர் வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது இந்த படத்தில் முதல் முறையாக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பின்னனி இசையமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஏன்... இந்திய சினிமாவில் கூட இது முதல் முயற்சியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படம் வருகின்ற டிசம்பர் 7ந் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !