உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள்

2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள்

ஒரே ஆண்டில் இரண்டு 500 கோடி ஹிந்திப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய இயக்குனர்கள் இருவர் சாதனை புரிந்திருக்கிறார்கள். ஒருவர், 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லீ, மற்றொருவர் 'அனிமல்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா.

ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த 'ஜவான்' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் இதுவரையிலும் 500 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படம் வெளியாகி ஒரு வாரம்தான் ஆகியுள்ளது. அதனால், இன்னும் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் தென்னிந்திய இயக்குனர்கள் மிகப் பெரும் வசூல் சாதனைகளைப் புரிந்தது கிடையாது. ஆனால், இப்போது நேரடி ஹிந்திப் படங்களை இயக்கி பெரிய வசூல் சாதனை செய்யும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !