மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
663 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
663 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
663 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்து ஹிந்தியில் வெளிவந்த 'அனிமல்' படம் 500 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் பாலிவுட்டில் ராஷ்மிகா இன்னும் பிரபலமாகி இருக்கிறார்.
இதன் காரணமாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படமான 'புஷ்பா 2' படத்திற்கு மேலும் மவுசு கூடியுள்ளது. 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்தது. இப்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது. இந்நிலையில் ராஷ்மிகாவும் ஹிந்தியில் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளதால் 'புஷ்பா 2' படம் இன்னும் பெரிய வசூலைக் குவிக்கும் என பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் எதிர்பார்க்கிறார்கள்.
முதல் பாகத்தை விடவும் அதிக பொருட்செலவில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்கள். அடுத்த வாரம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
663 days ago
663 days ago
663 days ago