பயில்வான் அசிங்கமானவர்! பப்லு பிருத்விராஜ் ஆவேசம்
ADDED : 674 days ago
பிரபல நடிகரான பப்லு பிருத்விராஜ் தனது காதலி ஷீத்தலுடனான உறவிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த செய்தி தான் கடந்த இரண்டு நாட்களாக இணையதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனது ஸ்டைலில் கிசுகிசுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பப்லு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதனை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். அந்த பேட்டியில் பப்லு பேசியதாவது, 'பயில்வானுக்கு வேறு வேலை இல்லை. அடுத்தவர்களை தரக்குறைவாக பேசினால் தான் அவருக்கு சோறு. அசிங்கமானவர்களால் இப்படி அசிங்கமாக தான் பேச முடியும். காசுக்காக இப்படி அசிங்கமாக பேசலாமா? உன் அம்மாவையோ தங்கையையோ இப்படி ஒருவர் பேசினால் உனக்கு எவ்வளவு வலிக்கும்?' என்று கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.