46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்!
ADDED : 775 days ago
நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற படத்தில் காமெடியனாக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. அதையடுத்து எல்கேஜி, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட், ஜெயிலர், மார்க் ஆன்டணி என பல படங்களில் காமெடியனாக நடித்தார். இந்நிலையில் தற்போது 46 வயதாகும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சங்கீதா விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதோடு தற்போது ஆனந்த ராகம் என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். எளிமையான முறையில் நடைபெற்றுள்ள அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.