மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
629 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
629 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
629 days ago
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படம் 'பைட்டர்'. அனில் கபூர், அக்ஷய் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். வயாகாம் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. படம் வருகிற ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படம் வெற்றி பெறுவதற்காக தீபிகா படுகோனே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பக்தர்களுடன் இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். வழிநெடுக படி பூஜையும் செய்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகாபடுகோனேவுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருமலை சென்று அடைந்ததும் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில தங்கினார் பின்னர் நேற்று அதிகாலையில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
629 days ago
629 days ago
629 days ago