உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி

‛பெத்தி' படத்துக்காக ராம்சரணுக்கு தேசிய விருது நிச்சயம் ; நடிகர் ரவிகிஷன் உறுதி


தெலுங்கில் ராம்சரண், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பெத்தி'. புச்சிபாபு சனா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவராஜ்குமார், பொம்மன் இரானி மற்றும் போஜ்புரி நடிகர் ரவிகிஷன் என மற்ற மொழிகளில் இருந்து பிரபல நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூன் நான்காம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி போபாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவிகிஷன் பேசும்போது, வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து முடங்கிப்போய் இருக்கும் இளைஞர்களுக்கு பெத்தி ஒரு புதிய நம்பிக்கையைத் தரும். குறிப்பாக இதை இந்தியாவின் நம்பிக்கை, இளைஞர்களின் நம்பிக்கை என்று சொல்லலாம். இந்த படத்தில் ராம்சரணின் நடிப்புக்குத் தேசிய விருது உட்பட பல விருதுகள் வரப்போகின்றன என்பதை இப்போதே என்னால் பார்க்க முடிகிறது என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !