‛வேட்டையன்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா...?
ADDED : 717 days ago
ஜெய் பீம் பட இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படமாக 'வேட்டையன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் இதன் அறிமுக டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்போது இந்த படத்தை 2024ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு ஏப்., 12ல் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.