அயோத்தி படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா?
ADDED : 995 days ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் புதுமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவந்த திரைப்படம் 'அயோத்தி'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.
இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் முதலில் சசிகுமாருக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டியது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, அயோத்தி படத்தில் முதலில் ஹீரோவாக உரியடி விஜயகுமார் தான் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால், கதை விவாதத்தின் போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பின்னர் சசிகுமார் நடித்து அயோத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.