இரண்டாவது திருமணம் பற்றி சமந்தா கருத்து
ADDED : 704 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து, சில வருடங்களிலேயே அவரை பிரிந்தும் விட்டார்.
ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார் சமந்தா. அப்போது ஒரு ரசிகர், “மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறதா ?'' என்று கேட்டிருந்தார். அதற்கு சமந்தா விவாகரத்து குறித்த புள்ளி விவரங்கள் சிலவற்றைப் பகிர்ந்து, “இந்த புள்ளி விவரங்களின் படி அது மோசமான ஒரு முதலீடு,” என்று பதிலளித்துள்ளார்.
அந்த புள்ளி விவரத்தில், “2023ஐ பொறுத்தவரையில், முதல் திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் 2வது, 3வது திருமணம் செய்து கொண்டவர்களின் விவாகரத்து, ஆண்கள், பெண்கள் ஆகியோரிடையே 67 சதவீதம், 73 சதவீதம் என்ற அளவில் உள்ளது,” என்று உள்ளது.