உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடாமுயற்சி படக்குழுவுக்கு சிக்கன் கிரேவி செய்து கொடுத்து அசத்திய அஜித்குமார்!

விடாமுயற்சி படக்குழுவுக்கு சிக்கன் கிரேவி செய்து கொடுத்து அசத்திய அஜித்குமார்!

துணிவு படத்தை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும், அஜித்குமாரை பொறுத்தவரை தனது படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போது படப்பிடிப்பு குழுவினருக்கு தனது கையாலேயே பிரியாணி சமைத்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படப்பிடிப்பு இடைவெளியின் போது ஒரு நாள் மொத்த படக்குழுவினருக்கும் வழக்கம்போல் பிரியாணியாக இல்லாமல், சிக்கன் கிரேவியை செய்து கொடுத்து அசத்தியிருக்கிறார் அஜித். அதை சாப்பிட்ட விடாமுயற்சி படக்குழுவினர் மிகவும் சுவையாக இருந்ததாக சொல்லி அஜித்குமாரை பாராட்டி நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !