விடாமுயற்சி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த த்ரிஷா
ADDED : 661 days ago
லியோ படத்தை அடுத்து தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சியில் நடித்து வருகிறார் த்ரிஷா. கடந்த காலங்களில் அஜித்துக்கு காதலியாக பல படங்களில் நடித்த த்ரிஷா, இந்த படத்தில் அவரது மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு த்ரிஷாவும் அங்கு சென்று அஜித்துடன் இணைந்து நடித்து வந்தார். தற்போது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பி இருக்கிறார் த்ரிஷா. அடுத்து மலையாளத்தில் டொவினோ தாமஸ உடன் நடித்து வரும் ஐடென்டிட்டி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் த்ரிஷா, மீண்டும் ஜனவரி மாதத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.