சிவகார்த்திகேயன் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் லாரன்ஸ்
ADDED : 706 days ago
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்தியாசமான படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் தனது அடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறார். அந்தவகையில் தனது அடுத்த படத்திற்காக அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தி உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று நேற்று நாளை, அயலான் படத்தின் ரவிக்குமார் உடனும் தற்போது ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.