தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை
ADDED : 669 days ago
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து, இயக்கிய படம் 'மாயவன்'. 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். தற்போது இதன் இரண்டாம் பாகம் 'மாயா ஒன்' என்ற பெயரில் உருவாகிறது. இதனையும் சி.வி.குமாரே இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சந்தீப் கிஷன் நாயகனாக தொடர, 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஆகன்ஷா ரஞ்சன் கபூர் நாயகியாக நடிக்கிறார். ஆகன்ஷா 'கில்தி' என்ற படத்தில் அறிமுகமாகி 'மோனிகா ஓ மை டார்லிங்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ரே' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.