பூஜா ஹெக்டேவை இயக்கும் அஜய் ஞானமுத்து
ADDED : 657 days ago
தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரொடக்சன்ஸ். சினிமாவில் உள்ள இயக்குனர், நடிகர்களுக்கு ஏவிஎம் நிறுவனத்தில் படம் பண்ணுவது என்பது கனவு. கடந்த சில வருடங்களாக பட தயாரிப்பிலிருந்து இந்நிறுவனம் ஒதுங்கியே இருக்கிறது.
இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஏவிஎம் நிறுவனம் ஓடிடி தளத்திற்காக புதிய படம் ஒன்றை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிக்கின்றனர். இந்த படத்தை கோப்ரா பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இது பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட கதை என்பதால் இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.