உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒவ்வொரு காலுக்கும் ஒரு கலர் ஷூ ; பார்வதி கலாட்டா

ஒவ்வொரு காலுக்கும் ஒரு கலர் ஷூ ; பார்வதி கலாட்டா

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தாங்கள் அணிந்து வரும் உடைகள், ஆபரணங்கள் எல்லாமே உடனுக்குடன் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி என்னதான் விதவிதமான நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தாலும் காலில் அணியும் செப்பல் மற்றும் ஷூக்கள் மட்டும் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தை யாருமே மாற்றுவதில்லை.

இதிலும் ஒரு புதுமையை செய்ய வேண்டும் என நடிகை பார்வதி நினைத்தாரோ என்னவோ இரண்டு கால்களிலும் இரண்டு விதமான நிறம் கொண்ட ஷூக்களை அணிந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார். ரசிகர்களும் அவரது கலாட்டாவை ரசித்து விதவிதமான கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !