விஜயகாந்தை குழந்தைபோன்று பாதுகாத்த பிரேமலதா
ADDED : 649 days ago
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் நேற்று காலை காலமானர். அவரது உடல் இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலமில்லாமல் இருந்த விஜயாகாந்தை அரசியலுக்காக அவரது மனைவி பிரேமலதா பயன்படுத்தி வருகிறார். உடல்நலமில்லாதவரை பொது மேடைக்கு அழைத்து வந்து அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மீது கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் விஜயகாந்துக்கு பிரேமலதா முகச் சவரம் செய்து, முடிவெட்டி, டை அடிக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் இந்த வீடியோவை அப்போது வெளியிட்டனர். அவரை ஒரு குழந்தையை போன்று கவனித்துக் கொள்ளும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.