2023ம் ஆண்டின் கடைசி வொர்க் அவுட்- சமந்தா வெளியிட்ட வீடியோ!
ADDED : 646 days ago
கடந்த ஆண்டில் சமந்தா நடிப்பில் சாகுந்தலம், குஷி போன்ற படங்கள் வெளியாகின. இதையடுத்து சமந்தா நடிக்கும் புதிய படங்கள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா தொடர்ந்து அதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காகவே புதிய படங்களில் அவர் கமிட்டாகவில்லை என்றும் கூறப்படுகிறது. என்றாலும் தனது உடல்கட்டை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக அவர் தொடர்ந்து ஒர்க்அவுட் செய்து வருகிறார்.
அது குறித்த வீடியோக்களையும் அவ்வபோது வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது ஜிம்மில் அதிக எடையை கொண்ட பளுவை தூக்கி ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு 2023ம் ஆண்டின் கடைசி ஒர்க்அவுட் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார்.