துபாயில் குடும்பத்துடன் கொண்டாட்டத்தில் அஜித்
ADDED : 642 days ago
அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு கடும் குளிர் மற்றும் அவ்வப்போது புயல் காற்றும் வீசி வருவதால் படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருக்கிறார். ஆங்கில புத்தாண்டு தினத்தை துபாய் நாட்டில் கொண்டாடிய அஜித் அங்குள்ள சொகுசுப் படகில் தனது குடும்பத்தாருடன் பயணித்துள்ளார். அதோடு, நடுக்கடலில் தனது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். புத்தாண்டு தினத்தில் ஒரு பெண் ரசிகையுடன் இணைந்து நடனமாடியுள்ளார் அஜித். இந்த இரண்டு வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.