உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒப்பந்தத்தை மீறிவிட்டார் : நடிகர் பாலாவின் மீது வழக்கு தொடரும் முன்னாள் மனைவி

ஒப்பந்தத்தை மீறிவிட்டார் : நடிகர் பாலாவின் மீது வழக்கு தொடரும் முன்னாள் மனைவி

இயக்குனர்சிவாவின் தம்பியும் தமிழில் வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான பாலா பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து இருவரும் பிரிந்தனர்.

அதன்பிறகு கடந்த வருடம் எலிசபெத் என்கிற டாக்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் பாலா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தங்களது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன என்று அவர் கூறும்போது தான் கண்ணால் கண்ட அந்த ஒரு காட்சி தான் தன்னை அந்த முடிவெடுக்க தூண்டியது என்று கூறியிருந்தார். மேலும் தனது குழந்தையை தன் முன்னாள் மனைவி அம்ருதா தன்னிடம் காட்ட மறுக்கிறார் என்றும் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் அம்ருதா தனது வழக்கறிஞர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, விவாகரத்து பெற்ற சமயத்தில் அதற்கு பின்வரும் நாட்களில் ஒருவரை ஒருவர் விமர்சித்துப் பேசி பெர்சனலாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று செய்திருந்த ஒப்பந்தத்தை நடிகர் பாலா மீறிவிட்டார் என்றும் அதனால் அவர் மீது வழக்குத் தொடர இருக்கிறேன் என்றும் கூறினார். மேலும் தங்களது மகளை பாலாவிடம் காட்ட தான் மறுப்பதாக அவர் கூறியதில் எந்த உண்மையையும் இல்லை என்றும் கூறியுள்ளார் அம்ருதா சுரேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !