2 நாளில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஏழு கடல் ஏழு மலை' கிளிம்ப்ஸ் வீடியோ
'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள புதிய படம் 'ஏழு கடல், ஏழு மலை'. 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்த நடிகர் நிவின்பாலி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படம் 53வது ரோட்டர்டாம் உலகத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகி இருக்கிறது. இந்நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டது. வித்தியாசமான கதைக்களத்தை வெளிப்படுத்திய இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, வெறும் 2 நாளில் 2 மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்றுள்ளது.