ஸ்பானிஷ் மற்றும் ஜப்பான் மொழியில் வெளியாகும் சலார்
ADDED : 638 days ago
நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. தெலுங்கில் மட்டும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது. தமிழ் உள்ளிட்ட பிற மாநிலங்களில் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இதற்கு முன்னதாக வெளியான பிரபாஸின் மூன்று படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் இந்த படம் ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் சலார் திரைப்படம் ஸ்பானிஷில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் மார்ச் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. அதேபோல வரும் ஏப்ரலில் ஜப்பான் மொழியிலும் இந்தப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.