கேப்டன் மில்லருக்கு 14 இடத்தில் வெட்டு
ADDED : 685 days ago
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 12ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை சாணி காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனிடையே படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் தணிக்கை குழுவினர் செய்த மாற்றங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தில் வரும் பல வசனங்களை தணிக்கை குழு நீக்கம் செய்துள்ளது. படத்தில் மொத்தம் 14 இடங்களில் கட் கொடுத்துள்ளது. படத்தில் மொத்தமாக 4 நிமிடங்கள் 36 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சி நேரம் 2 மணி நேரம் 37 நிமிடங்களாக சுருங்கியுள்ளது.