உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகி பிப்., 9க்கு தள்ளிப்போன ‛லால் சலாம்'

பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகி பிப்., 9க்கு தள்ளிப்போன ‛லால் சலாம்'

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள படம் ‛லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் சற்றே நீண்ட சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் கபில் தேவ்வும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. முன்னதாக பொங்கல் வெளியீடு என அறிவித்து இருந்தனர். ஆனால் பட பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என தகவல் வந்தது. அதைப்போலவே இந்த படத்தை பற்றிய எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜன., 25ல் படம் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது பிப்., 9ல் ரிலீஸ் செய்வதாக படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !