ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு டும் டும்
ADDED : 636 days ago
மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஷெரின் காஞ்ச்வாலா. மாடலிங் துறையில் நுழைந்து, விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமா நடிகை ஆனார். சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் பிறகு சிபிராஜூடன் வால்டர், சந்தானத்துடன் டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷெரின் காஞ்ச்வாலாவிற்கு அசார்முன் என்ற தொழிலதிபருடன் சத்தமின்றி கடந்த 5ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை அவர் இப்போதுதான் தெரியப்படுத்தி உள்ளார். நிச்சயதார்த்த படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவர் “என்றென்றும் என்னவன்” எனக் கூறியுள்ளார்.
திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை, விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார் ஷெரின் காஞ்ச்வாலா.