மலையாள படத்தில் ஐஸ்வர்யா தோற்றம் வெளியீடு
ADDED : 637 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 'அஜயண்டே ரெண்டாம் மோஷனம்', என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேசுடன் கிர்த்தி ஷெட்டி, சுரபி லட்சுமி ஆகியோரும் நடிக்கிறார்கள். டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கிறார். இந்த படம் 'ஆட்டோகிராப்' பாணியிலான படம். தன் வாழ்வில் சந்தித்த பெண்களை மீண்டும் சந்திக்க செல்லும் இளைஞனின் கதை. ஜிதின் லால் இயக்கி உள்ளார். திபு நிணன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.
படம் முன்பே தயாராகி விட்டாலும் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தில் ஜோதி என்ற தமிழ் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்ற தகவலுடன் அவரது தோற்றத்தையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரவிக்கை அணியாமல் இருக்கும் அவரது தோற்றம் வைரலாக பரவியது.