சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியானது!
ADDED : 727 days ago
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானத்துடன் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். சான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கிராமத்தில் உள்ள மக்களின் மூட நம்பிக்கைகளை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். 1960ம் ஆண்டு காலகட்ட கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கதையில் உருவாகி இருக்கிறது. வருகிற பிப்ரவரி இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.