மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
623 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
623 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
623 days ago
கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறி உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் ஒரு வழியாக தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் மூலம் ஏ.ஆர் ரகுமான் இருபத்தி எட்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார். இயக்குனர் பிளஸ்சி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இந்த படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர் பி.கே சஜீவ் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இயக்குனர் பிளஸ்சி, மோகன்லாலை வைத்து தன்மாத்ரா, பிரம்மராம் மற்றும் பிரணயம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் தன்மாத்ரா படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் தான் இந்த இருவரும் மீண்டும் நான்காவது முறையாக ஒரு படத்திற்கு இணைய இருக்கிறார்கள் என்கிற தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
623 days ago
623 days ago
623 days ago