அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள படம் அயலான். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரைக்கு வந்திருக்கிறது. ஏலியனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி, வெளியாகி உள்ளது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற கொடூர உருவத்தில் இல்லாமல், குழந்தைகளை கவரும் வகையில் ஒரு குட்டி ஏலியனை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் ரவிக்குமார். இந்த நிலையில் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது. 20 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் படம் உருவாக்கம், கிராபிக்ஸ் பணிகள், ஒளிப்பதிவு உள்ளிட்ட பல விஷயங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.