பிரசன்னா பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் அமீர்கான்!
ADDED : 885 days ago
ஹிந்தி நடிகர் அமீர்கான் நடித்து கடந்த 2022ல் வெளிவந்த 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்குப் பிறகு இன்னும் தனது அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் தமிழில் பிரசன்னாவை வைத்து 'கல்யாண சமையல் சாதம்' என்கிற படத்தை இயக்கிய ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் அமீர்கான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது சோசியல் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த படத்திற்கு 'சித்தாரே ஜமீன் பர்' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதில் கதாநாயகியாக நடிக்க ஜெனிலியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.