மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது
ADDED : 621 days ago
2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை துறையில் சிறந்து விளங்கியதற்காக சமீபத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், தேமுதிக., கட்சியின் தலைவராகவும் திகழ்ந்து, தமிழக அரசியலில் எதிர்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த டிச., 28ல் காலமானார். ஏற்கனவே தமிழக அரசின் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ள இவர் இப்போது மறைந்த பின்னர் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் விருதை பெற்றுள்ளார்.