இளையராஜா மகள் பவதாரிணி உடல் : அம்மா, பாட்டி நினைவிடம் அருகே நல்லடக்கம்
ADDED : 630 days ago
தேனி : இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் பிரபலங்கள் அஞ்சலி
தேனியிலும் பிரபலங்கள் அஞ்சலி
பின்னர் பவதாரிணி உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர். இன்று(ஜன., 27) காலை அவரது உடல் தேனி வந்தது. கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் இளையராஜாவின் உறவினர்களும் தேனி வந்தனர். தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு டிரம்ஸ் சிவமணி, நடிகர்கள் ஜான் விஜய், அபி சரவணன், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கலங்கிய பாரதிராஜா
இளையராஜாவின் நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா தேனியில் இருந்தபடி பவதாரிணி உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார். பவதாரிணியின் உடலை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
எப்படி ஆறுதல் சொல்ல
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இளையராஜா பின்னர் கார் மூலம் தேனிக்கு வந்தார். தனது பண்ணை தோட்டத்தில் வைக்கப்பட்ட மகள் பவதாரிணி உடலை பார்த்து கலங்கி போய் இருந்தார். அவருக்கு பாரதிராஜா, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
நல்லடக்கம்பின்னர் பவதாரிணி உடல் சாந்தி அடைய ஓதுவார்கள் மூலம் திருவாசகம் பாடப்பட்டது. அவரது உறவினர்கள் பவதாரிணி பாடி தேசிய விருது வாங்கிய மயில் போல பொண்ணு ஒன்னு... பாடலை பாடி வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.