சந்தானம் படத்தை தயாரிக்கும் ஆர்யா!
ADDED : 773 days ago
லொல்லு சபா ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் சந்தானம் கூறியதாவது, டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை ஆர்யா தயாரிக்கின்றார் என மேடையில் அறிவித்துள்ளார்.