ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம்
ADDED : 673 days ago
மேடை கலைஞரான நடிகர் ரோபோ சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர். மாரி, புலி, விஸ்வாசம் என பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மகள் இந்திரஜா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற வேடத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் நடித்தார். இந்த நிலையில் இந்திரஜாவுக்கும் - கார்த்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. அப்போது மகள் இந்திரஜாவை ரோபோ சங்கரும் அவரது மனைவி பிரியங்காவும் வாழ்த்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.