உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளன்று வேலராமமூர்த்திக்கு வந்த ஷாக் செய்தி

பிறந்தநாளன்று வேலராமமூர்த்திக்கு வந்த ஷாக் செய்தி

பிரபல எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேலராமமூர்த்தி தற்போது சின்னத்திரை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சீரியல் குழுவினர் விமர்சையாக கொண்டாடினர். இதுகுறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள வேலராமமூர்த்தி கூடவே வருத்தத்திற்குரிய ஒரு செய்தியையும் கூறியுள்ளார். அதாவது வேலராமமூர்த்தி பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை மக்களிடம் கூறிய அவர் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என வேண்டுகோளும் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவானது தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !