நல்ல வாய்ப்பை இழந்தேன் : சாக்ஷி அகர்வால் வேதனை
ADDED : 610 days ago
சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களிடம் ரீச்சானார். தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் பெரிய அளவில் அவருக்கு ப்ரேக் கிடைக்கவில்லை. அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'ராஜா ராணி படத்தில் ஆர்யா ஹீரோ, அட்லி இயக்குநர். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் நான் தான் என நடிப்பதற்கு அழைப்பு வந்தது. தயாரிப்பு பற்றி அப்போது எனக்கு தெரியாது. நான் இரண்டு நாட்கள் நடித்தேன். அதன்பிறகு அழைப்பதாக சொன்னார்கள். ஆனால் படத்தின் ஷூட்டிங் முடிந்து படமே ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் நான் டேட்டுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்த படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. எதில் தவறு நடந்தது என்று தெரியவில்லை. அதை பற்றி நான் பேச விரும்பவில்லை' என்று அதில் கூறியுள்ளார்.