ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல்
ADDED : 6 hours ago
மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற தனியார் பாராமெடிக்கல் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விமல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛தற்போது ஏழாம் பொருத்தம், வடம் மற்றும் சிம்புத்தேவன் உடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடிக்கிறேன். ஜனநாயகன் படம் சென்சார் பிரச்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி என்னிடம் கேட்டால் என்ன செய்ய முடியும். நான் அவருடன் கில்லி, குருவி படங்களில் நடித்துள்ளேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான். நான் சின்ன படங்களில் தான் நடிக்கிறேன். நல்ல படங்கள் வந்தால் மக்கள் ரசிப்பார்கள், நிச்சயம் ஓடும்'' என்றார்.