தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா
ADDED : 7 hours ago
கடந்தாண்டு ஜனவரியில் திரைக்கு வந்த படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தில் மணிகண்டனின் மனைவியாக குடும்ப பாங்கான வேடத்தில் நடித்திருந்தார் சான்வி மேக்னா. அதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் நாளை ஜனவரி 14ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு திரைக்கு வரும் படம் அனாகனக ஒக ராஜு. இந்த படத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமு என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியது போன்று சான்வி மேக்னாவும் ஒரு சிறப்பு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.