மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
601 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
601 days ago
இயக்குனர் ராம் இயக்கும் படங்கள் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் பெறும். தனது படங்களை பட விழாக்கள் மூலம் சர்தேசத்துக்கு அறிமுகப்படுத்தி விட்டே திரையரங்குகளில் வெளியிடுவார் ராம். அந்த வரிசையில் தற்போது இயக்கி உள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தையும் சர்வதேச பட விழாக்களுக்கு கொண்டு சென்றுள்ளார்.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, புகழ்பெற்ற பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களில் பார்வைக்காக திரையிடப்பட்டது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் ராம், நடிகர்கள் நிவின் பாலி, சூரி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அடுத்தடுத்த பட விழாக்களில் திரையிட்டு விட்டு ஏப்ரல் மாதம் படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
601 days ago
601 days ago