திரவுபதியாக மாறும் ஜான்வி கபூர்
ADDED : 607 days ago
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ‛சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதற்கு பின், மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் 'கர்ணா' படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்க உள்ளார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.
இதில் திரவுபதியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெஸ்ட் ஷூட் இரு முறை நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.