மகாநதி சீரியல் 'காவேரி' உண்மையில் யார் தெரியுமா?
ADDED : 606 days ago
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் காவேரி கதாபாத்திரத்தில் நடிக்கும் லட்சுமி பிரியா இளைஞர்கள் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறார். சீரியலில் நடிக்கும் முன் மாடலிங் செய்து வந்த லட்சுமி பிரியா, மிஸ் மிராக்கி 2018 என்ற அழகி பட்டத்தை வென்றுள்ளார். மேலும், வெள்ளித்திரையில் நடிகை த்ரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தல, யோகிபாபுவின் பன்னிக்குட்டி மற்றும் ட்ரிப் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.