மங்கை படத்தின் முதல் பாடல் வெளியீடு
ADDED : 601 days ago
சாந்தனுவுடன் இணைந்து ராவண கோட்டம் என்ற படத்தில் நடித்த கயல் ஆனந்தி அதையடுத்து தற்போது மங்கை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் ஆனந்தியுடன் துஷி, ஆதித்யா கதிர், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கிடா என்ற படத்திற்கு இசையமைத்த தீசன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா ஆகியோர் வெளியிட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் பாடலான 'ஏலம்மா ஏலோ...'-வை இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், கிருத்திகா உதயநிதி ஆகியோர் வெளியிட்டனர். கார்த்திக் நேதா எழுதிய இந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடி உள்ளார். விரைவில் படம் திரைக்கு வர உள்ளது.