உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்

சிறு சிறு படங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ், 'கைதி' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்டார். அதன்பிறகு 'விக்ரம்' உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்த அவர் 'அநீதி' படத்தின் மூலம் நாயகன் ஆனார். தற்போது 'போர்' என்ற தமிழ் படத்திலும், 'ஓஜி' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார்.

மலையாளத்தில் 'ஜூன்', 'மதுரம்' மற்றும் 'கேரளா கிரைம் பைல்ஸ்' வெப் சீரிஸ் இயக்கிய அகமது கபீர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 'ஹிருதயம்', குஷி, ஹாய் நான்னா படங்களுக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !