எஸ்கே 21 பட தலைப்பு ‛அமரன்' : மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ஒரு படம் தயாராகிறது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இதை கமல் தயாரிக்கிறார். நாளை(பிப்., 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.
முழுக்க முழுக்க காஷ்மீர் பின்னணியில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்... அதை இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் விதம்... சிவகார்த்திகேயனின் ராணுவ கம்பீரம்... என டீசர் விவரிக்கிறது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தின் டீசரை வெளியிட்டு கமல் வெளியிட்ட பதிவில், ‛‛பிறந்தநாள் காணும் அன்புத் தம்பி சிவகார்த்திகேயன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். #Amaran
(அமரன்) திரைப்படத்தின் டைட்டில் டீஸரை வெளியிடுவதில் மகிழ்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
1992ல் கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில் இதே தலைப்பில் ஒரு படம் வெளியானது இங்கே குறிப்பிடத்தக்கது.