அடுத்தமாதம் துவங்கும் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம்
ADDED : 606 days ago
சில வருடங்களுக்கு முன்பு துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தை ரஞ்சித் தயாரிப்பதாக அறிவித்தனர். இடையில் கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களைக் மாரி செல்வராஜ் இயக்கியதால் இப்படம் தாமதமானது. தற்போது அந்த படங்கள் வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தை துவங்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன்படி இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் மார்ச்சில் தொடங்குகிறது என கூறப்படுகிறது. இத்திரைப்படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு என்பதால் இதற்காக துருவ் விக்ரம் நீண்ட மாதங்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.