அரசியலுக்கு வரும் ஹேமமாலினி மகள் இஷா தியோல்
ADDED : 643 days ago
பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் இஷா தியோல். பாலிவுட் நடிகை ஹேமமாலினி - நடிகர் தர்மேந்திரா தம்பதியின் மகளான இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்த இஷா தியோலுக்கு, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் அவரை பிரிந்துவிட்டார்.
இந்த நிலையில் ஹேமமாலினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது மகள் அரசியலில் ஆர்வம் காட்டுவதாகவும், விரைவில் அவர் ஒரு அரசியல் கட்சியில் இணைவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஹேமமாலினி தற்போது பாஜக எம்பி ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.