உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்குவா படத்தை பார்த்து விட்டு சிவாவை வாழ்த்திய சூர்யா

கங்குவா படத்தை பார்த்து விட்டு சிவாவை வாழ்த்திய சூர்யா

சிவா இயக்கியுள்ள கங்குவா என்று பேண்டஸி படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறையில் திரைக்கு வரும் இந்த படத்தை சில தினங்களுக்கு முன்பு சூர்யா பார்த்துள்ளார். அப்போது படம் தனக்கு திருப்திகரமாக இருந்ததால், சிவாவை கட்டி தழுவி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் . கங்குவா படத்தை அடுத்து சுதா இயக்கும் படம் மற்றும் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கும் கர்ணா போன்ற படங்களில் நடிக்கிறார் சூர்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !