5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அர்த்தனா பினு
ADDED : 587 days ago
'கடைகுட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்திருந்தவர் அர்த்தனா பினு. கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில். பின்னர் மலையாள படத்தில் நடித்தார். 'தொண்டன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார், கடைசியாக 'வெண்ணிலா கபடி குழு' இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்த படம் 2019ம் ஆண்டு வெளிவந்து. இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படம் தான் 'வாஸ்கோடகாமா'.
இதில் அவர் நகுல் ஜோடியாக நடித்தார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கி உள்ளார். கே.எஸ்.ரவிகுமார், மன்சூரலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அருண் இசை அமைத்துள்ளார்.